வெல்லாவெளியில் சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் 32வதுஆண்டு விழா!!


மட்டு- போரதீவுப்பற்று வெல்லாவெளியில் வரைவற்ற வெல்லாவெளி சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க 32வது ஆண்டு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் வெல்லாவெளி பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (17/11/2018) சனிக்கிழமை வெல்லாவெளி சி.க.கூ சங்கத் தலைவர் திரு.போ.சிவனேசராசா தலைமையில் மு.ப 10:30 மணியளவில் இனிதே ஆரம்பமாகியது இந் நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக கூட்டுறவு அபிவிருந்தி உதவி ஆணையாளர் -மட்டக்களப்பு திரு.K.V.தங்கவேல் மற்றும் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ.இராகுலநாயகி அவர்களும் சிறப்பு விருந்தினராக தவிசாளர் போரதீவுப் பற்று பிரதேச சபை கௌரவ. யோ.ரஜனி அழைக்கப்பட்டிருந்தார் (தவிர்க்கமுடியாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியவில்லை)
விசேட விருந்தினர்களாக தலைமைக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.K.மகேஸ்வரன் மற்றும் வெல்லாவெளி கிராம சேவை உத்தியோகத்தர் திரு.ப.இம்சன் மற்றும் களுவாஞ்சிகுடி வலய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுரேஸ்குமார் அவர்களும் மற்றும் சி.க.கூ சங்க உறுப்பினர்கள் மற்றும் வெல்லாவெளி விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் முதியோர் சங்க உறுப்பினர்கள் மீன்பிடி சங்க உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
முதன்மை நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், மௌன இறைவணக்கம்,மறைந்த கூட்டுறவாளர்களுக்கான மௌன அஞ்சலியும் தொடர்ந்தும் வரவேற்புரையினை சங்கத்தின் பொருளாளர் திருமதி.பா. இராசையா அவர்கள் நிகழ்த்த தலைமையுரையினை சங்கத்தின் தலைவர் திரு.போ.சிவனேசராசா நிகழ்த்தினார் தொடர்ந்து அதிதிகள் உரை இடம்பெற்றது.


அதிதிகள் உரையின் போது அவர்கள் ஒவ்வொருவரும் கூறிய கருத்துகள் ஒருமித்த கருத்துக்களாகவே இருந்தது கடந்த கால சூழலுக்கு சுமார் 32 வருடங்கள் தாக்குப் பிடித்து இந்த சி.க.கூ சங்கத்தினை வழி நடாத்தியமைக்கு பொன்னாடை போர்த்து சங்க தலைவர், செயலாளர், பொருளாளரையும் பாராட்டி அது மட்டுமல்லாது தற்போதைய நுண்கடன் அதனால் ஏற்படும் தற் கொலைகள் பற்றிய விளிப்புணர்வு சம்பந்தமான விடங்களையும் மிகவும் ஆணித்தரமாக பதிவு செய்ததோடு இந்த சங்கச் செயற்பாட்டில் இளம் தலைமுறையினரையும் உள் வாங்கி அவர்களுக்கு கூட்டுறவின் முக்கியத்துவத்தினை உணர்த்த வேண்டுமென்றும் வினயமாக கேட்டுக் கொண்டதோடு தற்போது இந்த கூட்டுறவு சங்கமானது ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதென்றும் நூற்றாண்டுகளை கடந்து பயணிப்பதாகவும் வெல்லாவெளி கூட்டுறவுச் சங்கத்துக்கென நிரந்தர கட்டிடம் அமைப்பதற்காக தங்களால் முடிந்தளவு முயற்சிப்பதாகவும் வாக்களித்து சென்றதனை காணக்கூடியதாக இருந்தது.அது மட்டுமல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற அதிபர் மற்றும் சங்க உறுப்பினர் திரு.த.விவேகானந்தம் அவர்கள் உரையாற்றுகையில் மிக முக்கியமான விடயத்தினை பதிவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது அதாவது இன்றைய நாளில் இந்த நிகழ்வானது எதேச்சையாக தீர்மானிக்கப் பட்டிருந்தாலும் கூட்டுறவின் தந்தையான இலண்டனைச் சேர்ந்த ரொபேர்ட் ஓவன் அவர்களின் நினைவு தினமாகும் அந்த நன் நாளில் இவ்வாறானதொரு நிகழ்வு பெருமை தரக் கூடியது என்று குறிப்பிட்டுச் சென்றார்.


இதன் போது இடையிடையே உறுப்பினர்களுக்கான நினைவுச் சின்னங்கள் மற்றும் ஊக்குவிப்பு பரிசில்களும் அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது

இறுதி நிகழ்வாக சங்கத்தின் செயலாளர் திரு.த.அழகானந்தம் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு மதிய விருந்துபசாரமும் இடம்பெற்றதோடு இனிதே நிகழ்வு நிறைவடைந்தது.

                                                "கூட்டுறவே நாட்டுயர்வு"

No comments

Powered by Blogger.