முகநூலில் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து குறுஞ்செய்திகள் கசிவு!!


முகநூல் மூலம் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து பலரது தனிப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக வந்துள்ள தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா, இங்கிலாந்து, உக்ரைன், அமெரிக்கா, பிரேசில் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 81 ஆயிரம் முகநூல் பயனாளர்களின் தனிப்பட்ட குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் கசிந்துள்ளது. தங்கள் நண்பருடன் பேசியது, மருமகனைப் பற்றி தோழியிடம் மாமியார் குறை கூறுவது, புறம் பேசுவது என பல்வேறு குறுஞ்செய்திகள் கசியவிடப்பட்டுள்ளது.

ஒரு தனி நபரின் குறுஞ்செய்தி தகவலை கொடுப்பதற்கு ஹேக்கர்கள் 10 சென்ட், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு படி சுமார் 7 ரூபாய் வசூலிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் முகநூலின் தகவல் பாதுகாப்பு பிரிவுக்கு அபராதமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் விதிக்க வாய்ப்புள்ளது.

No comments

Powered by Blogger.