எழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் ஊடாக விபத்தில் காலினை இழந்த சிறுவனுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு!!எதிர்பாரத விபத்தின் காரணமாகவும் சமூகத்தின் அசமந்தப் போக்கு காரணமாகவும் காலை இழந்த வீரநகர் ஊத்துசேனை மாணவனின் கல்வி வளர்ச்சிக்காக உதவிட எழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் ஊடாக அமைப்பு உறுப்பினர் ரவிந்திரன் தனது மகள் கேஷியாவின் 7 வது பிறந்தநாளை முன்னிட்டு 30-11-2018 வெள்ளிக்கிழமை சுமார் 5000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வழங்கினார்.

சில நாட்கள் முன்பு முகப்புத்தக வாயிலாக மிகவும் வேதனையடைய வைத்த பதிவுகளில் ஒன்றாக எதிர்பாராத விபத்தொன்றில் தனது காலை இழந்த கூலித்தொழிலாளியான சிறிபால கிருஷ்ணமூர்த்தியின் மகனான பதினாறு வயதுடைய சிறிபாலகிருஷ்ணமூர்த்தி- திவ்யகாந்தன் வீரநகர் ஊத்துசேனை கிராமத்திலிருந்து மட்/ வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஒரு காலை இழந்த நிலையிலும் தனது கல்வியை தொடரும் அவ் மாணவனின் கல்வி வளர்ச்சிக்கு எழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் முன் நிற்க தவறவில்லை .

சிலர் அவர்களது பிறந்தினத்தின் போது அனாவசிய செலவுகளை செய்து வாழும் இவ் நாகரிக உலகில் தனது காலை இழந்து தனது கல்வி இலட்சியத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் தரம் 10ல் பயிலும் ஏழை மாணவனின் கல்வி மேம்பாட்டுக்காக திரு ரவீந்திரன் அவர்கள் வழங்கி எழுகதிர் ஏழைகள் அமைப்பின் தலைவர் சதா தம்பிராசா அவர்களது ஆலோசனைக்கு அமைவாக பாடசாலை உபகரணங்கள் அமைப்பின் நிருவாக களசெயற்பாட்டு உறுப்பினர்களால் 30/11/2018 அதாவது இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறான உதவிகளை ஏனைய கொடையாளிகளும் வழங்கி உதவிட முன்வர வேண்டுமென்பதே அமைப்பின் எதிர்பார்ப்பாகும்.

No comments

Powered by Blogger.