வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் மீது யானை தாக்குதல்!!

மட்டக்களப்பு திக்கோடை கணேஷா வித்தியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பழுகாமத்தை சேர்ந்த வன்னியசிங்கம் வினோதன் இன்று(29) கடமைக்கு செல்லும் போது திக்கோடை 50 வீட்டுத்திட்ட பகுதியில் வைத்து எதிர்பாராத விதமாக காட்டுயானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

தெய்வாதீனமாக காட்டுயானையிடமிருந்து அவர் உயிர் பிழைத்துள்ளதுடன் குறித்த யானை அவருடைய மோட்டார் சைக்கிளை முற்றாக சேதப்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு குறித்த பிரதேச மக்கள் ஏராளமானோர் பலியாகியுள்ளனர் பலர் இன்றும் தமது வாழ்வாதாரத்துக்காக போராடும் நிலமையையும் காண முடிகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய வன விலங்கு அதிகாரிகள் உரிய முறையினை கையாண்டு பாடசாலை மாணவர்கள் தங்களது கற்றல் நடவடிக்கையினை மேற் கொள்வதற்காகவும் அதே வேளை பிரதேச மக்கள் பயமின்றி வாழ்வதற்காகவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்பதே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.

No comments

Powered by Blogger.