மட்டு- வவுணதீவு பொலிஸ் சாவடி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் இருவர் சுட்டுக் கொலை!!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகிய சிங்கள, தமிழ் பொலீசார் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments

Powered by Blogger.