பின் கதவு நியமனத்தை எதிர்க்கும் மாபெரும் மக்கள் போராட்டம் மட்டக்களப்பில்!!


சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்பாளர் பதவிக்காக மூவர் விண்ணப்பித்திருந்த நிலையில் அநீதியான முறையில் குறித்த பணிப்பாளர் நியமனம் இடம்பெற இருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்.

நீதிக்கு புறம்பாக இடம்பெறவுள்ள இப் பணிப்பாளர் நியமனத்தை இரத்துச் செய்து மட்டக்களப்பில் ஊழலற்ற கல்வி நிறுவகத்தை வலியுறுத்தக்கோரி எதிர்வரும் 20.11.2018 புதன்கிழமை காலை 10.00. மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியும் அரசாங்க அதிபரிடம் குறித்த விடயம் சம்பந்தமாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

எனவே ஊழலற்ற கல்வி துறையை நிலைநிறுத்த விரும்பும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஊழலற்ற ஒரு கல்வித்துறையை எம் சமூகத்தில் கட்டிக்காக்க முன்வந்து ஆதரவினை நல்குமாறு சமூக நலன் விரும்பிகள் மற்றும் மட்டு இளைஞர் அணியினர் வினயமாக வேண்டுகோள் விடுப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.