தமிழ் ஓசை ஊடக அமையத்தினால் மிறாவோடை சக்தி வித்தியாலய மாணவர்களுக்கு பயிற்சிப் புத்தகங்கள் கையளிப்பு!!

இன்றைய தினம் 28/11/2018 புதன் கிழமை வாழைச்சேனை கல்குடா வலய த்துக்குட்பட்ட பாடசாலையான மட்/மிறாவோடை சக்தி வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலவிருக்கும் மாணவர்களுக்காக தமிழ் ஓசை ஊடக அமையம் மற்றும் மாருதம் இணையத் தளத்தின் ஊடகப் பிரிவினர் ஒருங்கிணைந்த களப் பயணத்தினை மேற் கொண்டு சுமார் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான பயிற்சிப் புத்தகங்களை பாடசாலை அதிபர் திரு.எஸ்.சுதாகரன் மற்றும் குறித்த வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியரிடமும் புத்தகங்களை முதற் கட்டமாக கையளித்தனர்.

மேலும் இப்பாடசாலை பற்றி மாணவர்களுக்கான கற்றல் வளங்கள் அவர்கள் எதிர் நோக்கும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்சனைகள் சம்பந்தமாக எமது ஊடகப் பிரிவினர் கேட்டறிந்து கொண்டனர்.

ஏற்கனவே இப்பாடசாலையானது அமைந்துள்ள பிரதேசம் ஒரு எல்லைக் கிராமமாகும் சாதாரணமாக எல்லைக் கிராமங்கள் இன்று நுணுக்கமான முறையில் சூறையாடப்பட்டுக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது அரசியல் செல்வாக்குடைய சில முஸ்லிம் இன வாதிகளின் செயற்பாட்டால் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் அழிக்கப் பட்டு வருகிறது அதிலும் இந்தப் பாடசாலையானது எதிர் நோக்கிய தற்போதும் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்ற சவால்கள் ஏராளம் பாடசாலை அதிபருக்கு தனி நபர் கொலை அச்சுறுத்தல் மற்றும் குறித்த கிராம மக்களை மதம் மாற்றம் செய்து எல்லைகளில் குடியிருப்புகளை உருவாக்கி அங்கே அமர்த்துதல் அதிலும் பார்க்க உச்ச கட்டமாக பாடசாலைக்கான விளையாட்டு மைதானத்தினை அரைவாசிக்கும் மேலாக சட்ட விரோதமாக தனி நபர்  காணியினை பிடித்து வேலி போட்டு எல்லையினை நிர்ணயித்துள்ளதோடு மட்டுமல்லாது மைதானத்துக்கு உடற்பயிற்சி பாட செயல் முறைக் கற்றல்களில் ஈடுபடும் மாணவிகளை நோக்கி நிர்வாணமாக நின்று தன் அந்தரங்க உறுப்பினை காண்பிப்பது போன்ற படு கேவலமான இழி செயலினை குறித்த நபர்கள் செய்து வருகிறார்கள் இதனை பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லவதற்காக 119 எனும் இலக்கத்துக்கு முறையிட்டும் அந்த முறைப்பாட்டினை செய்தவரையே கைது செய்து சென்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்த சட்டவிரோத காணி பிடிப்பு அதுவும் பாடசாலைக்கு உரித்தான அரச காணி மற்றும் மாணவ மாணவிகளினது உடற்கல்வி செயற்பாட்டினை செய்ய விடாது பாலியல் ரீதியான கேவலமான செயற்பாடுகள் போன்ற விடயங்களை தமிழ் அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் போன்றவர்களிடம் பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பாடசாலை ஆசிரியர் சங்கம் சமூக நலன் விரும்பிகள் பல முறையீடுகளை எழுத்து வடிவமாகவும் நேரடியாகவும் சுட்டிக் காட்டியும் எவரும் எந்த விதமான முன்னெடுப்புகளையும் முன்னெடுக்காதது இங்கே குறிப்பிடத் தக்க விடயம்.

அந்த வகையில் தற்போதைய அதிபர் பாடசாலையின் கல்வித் தரத்தினை உயர்த்த தன் அதியுச்ச கவனத்தை செலுத்தி முன்னெடுத்து வருவதனை எமது ஊடகப் பிரிவினரால் அவதானிக்க முடிந்தது.

தற்போதைய அரசாங்கத்தின் பிரச்சினைகளை விட பாரிய பிரச்சினைகளை இவ்வாறான எல்லைக் கிராமங்கள் எதிர் நோக்குகின்றன அவ்வாறான எல்லைக் கிராமங்களில்  பணத்திற்கும் கையூட்டுகளுக்கும் சோரம் போகாமல் கடமை புரிகின்ற அரச ஊழியர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே....

இருந்தும் தன் சமூகத்தின் உடமைகளை விற்றுப் பிழைக்கும் சில அரச அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காகவென கிழக்கில் எந்தத் துறையிலும் ஊழல் ஊடல் இல்லாத பண்பாடு மிக்க நியாயமுள்ள அநியாத்துக்கு துணை போகாத சேவையாளர்களை இனங்கண்டு அவர்களை முன்னுதாரணமாக்கி ஊழலாளிகளை வெளிச்சம் போட்டு காண்பிக்கவென தனித் தன்மையோடு எவருக்கும் சோரம் போகாமல் நடு நிலையாக செயற்படுவதே தமிழ் ஓசை ஊடக அமையம் அதோடு இணைந்த கரங்களாக எமது மாருதம் இணையத் தளமும் கை கோர்த்துள்ளது எனவே எமக்கான எமது செயற்பாட்டுக்கான பூரண ஆதரவினை கிழக்கு சமூகம் மாத்திரமல்ல உலகம் வாழ் தமிழ் இனமே தருமென நம்புகிறோம்.No comments

Powered by Blogger.