கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடான நியமனம் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

கிழக்கில் நடனம் சங்கீதம் செழித்தோங்கவென மண்ணின் மைந்தன் செ.இராசதுரை அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிறுவகம் இன்று சில ஈனர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது உபவேந்தர் பேராசிரியர் ஜெயசிங்கத்தின் ஒத்துழைப்புடன் பணிப்பாளர் கலாநிதி .சி.ஜெயசங்கர் தனது சொந்த நிறுவனமாக ஆக்கியிருக்கின்றார் இதற்கு முதகெலும்பில்லாத மட்டக்களப்பின் கல்வியலாளா்களும் அதிகாரிகளும் சாமரம் வீசுகின்றனர்.இதற்கு சரியான தீர்வுகிடைக்கப்பட வேண்டும் எனக்கோரி இன்று காலை 21/11/2018 புதன் கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்களும் மட்டக்களப்பு கல்விச்சமூகமும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்தி இறுதியில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் அவர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

படங்கள் 
நன்றி 
இலங்கையில் இருந்து எமது தமிழ்ஓசை மற்றும் மாருதம் செய்தியாளர்


No comments

Powered by Blogger.