ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த சபாநாயகர்!!


ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பிற்கு தான் கலந்து கொள்ளப்போவதில்லை என சபாநாகயர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. 

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இருப்பின் சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த சந்திப்பிற்கு கலந்து கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளார். 

ஜனாதிபதியுடன் இது தொடர்பில் தொலைபேசி மூலம் உரையாடியதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. 

இதன்போது கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் தன்னுடைய வருகை தேவையற்ற விடயம் என சபாநாயகர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற உள்ள சந்திப்பின் போது எடுக்கப்பட உள்ள தீர்மானத்தை தனக்கு அறிவித்ததன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் சபாநாயகர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.