மட்டு- முனைக்காடு கொக்கட்டிச் சோலையில் ஈகையர் குடும்பத்தாரை போற்றும் நிகழ்வு!!

இன்றையதினம் அதாவது ஞாயிறு 11/18/2018 பெரும் மதிப்புக்குரிய மாவீரர்கள் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வானது முனைக்காடு கொக்கட்டிசோலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அணி திரள பிரமாண்டமாக நடைபெற்றது 

இ்ன் நிகழ்வானது அறம் செய் அறக்கட்டளை வீரத்தமிழர் முன்னணி யின் ஏற்பாட்டில் சமூக ஆர்வமுள்ள ஆர்வலர்கள் இளைஞர்கள் இணைந்து நடாத்தப்பட்டது வருகை தந்த பெற்றோர்களுக்கு 
சேலை,வேட்டி,தென்னம்பிள்ளை, மற்றும் நூற்றியம்பது மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கியதோடு நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய போசனமும் வழங்கப்பட்டு மிகவும் உணர்வு பூர்வமாக நிகழ்வு இடம் பெற்றது.

No comments

Powered by Blogger.