மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்!!

டிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மாதா மாதம் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவனின் தகப்பனார் மாரடைப்பினால் இறந்து விட்டார் தாயாரின் பராமரிப்பிலேயே சிறுவன் இருந்து வருகிறார் இவருக்கு ஒரு சகோதரனும் உண்டு தன் மகனுடைய வைத்தியச் செலவுக்காக தான் குடியிருந்த வீட்டினையும் விற்று விட்டு தனது தமக்கையாரோடு தன்னாமுனையில் வசித்து வருகிறார் கல்வியிலும் ஆர்வமுள்ளவனான சிறுவனின் மேலதிக சிகிச்சைக்காக பெருந் தொகை பணம் தேவைப்படுவதாக முக நூல் வாயிலாக அறிந்து எமது ஊடகப் பிரிவினர் இன்று (28/11/2018) புதன்கிழமை இதன் உண்மைத் தன்மையினை அறியவும் உதவி தேவைப்படுபவர்களுக்கே உத வேண்டும் எனும் எண்ணத்தோடு களப் பயணம் மேற் கொண்டு சகல வைத்திய சான்றிதழ்களையும் பரிசோதித்து அவர்களின் நிலைப்பாட்டினையும் அறிந்து கொண்டனர்.

தரவுகளின் உண்மைத் தன்மைகள் உறுதிப் படுத்தப்பட்ட அடிப்படையில் இதனை ஒரு வேண்டு கோள் விடுக்கும் செய்தியாக பிரசுரிக்கிறோம்.
எனவே இந்த மலர்ந்த மொட்டினை வாட விடாது எம்மாலான சிறு உதவியேனும் செய்வோம் அந்த வகையில் முதற் கட்டமாக எழுகதிர் அமைப்பினூடாக தமிழ் ஓசை ஊடக மையம் மாருதம் இணையத் தளம் இணைந்து சிறு உதவியினை வழங்கிட முன் வந்துள்ளது எனவே கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு வழங்கப்படும் வங்கிக் கணக்கினூடாகவோ உறுதிப் படுத்தி விட்டு அல்லது நேரடியாகவோ சென்று முடிந்த உதவியினை செய்திடுங்கள்.

சர்மிளா அந்தோனிதாஸ் 111 சுனாமி வீட்டுதிட்டம் தண்ணாமுனை கொலனி
தொடர்பிலக்கம் 0094-762964569
வங்கி கணக்கு இலக்கம் 2716905 இலங்கை வங்கி (BOC)

No comments

Powered by Blogger.