இன்றைய இராசி பலன்கள்!(13/12/2018)

13-12-2018 இன்றைய ராசி பலன்கள் விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 27ம் திகதி, ரபியுல் ஆகிர் 5ம் திகதி, 13-12-18 வியாழக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதி இரவு 11:50 வரை; அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 6:27 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : முகூர்த்தநாள், சஷ்டி விரதம், முருகன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : 
தனித்திறமை செயல்களில் பிரதிபலிக்கும். தொழில், வியாபார வளர்ச்சி வியத்தகு முன்னேற்றம் பெறும்.

அதிக பணவரவினால், சந்தோஷம் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

ரிஷபம் : 
லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். துவங்கிய பணிகள் தாமதமின்றி இனிதே நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும்.

நண்பர்களுடன் விருந்து, விழாவிpல் கலந்து கொள்வீர்கள். பணவரவுக்கேற்ப வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம் : 
விருப்பங்களை நிறைவேற்றுவதில், அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, சில மாற்றங்களை பின்பற்றுவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கடகம் : 
சிலர் தந்த வாக்குறுதியை மீறி நடந்து கொள்வர். வாழ்வியல் நடைமுறையை சரி செய்வீர்கள்.

தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதால், நன்மை கூடும். செலவில் சிக்கனம் வேண்டும். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும்.

சிம்மம் : 
சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். முக்கியஸ்தர் ஒருவரின் உதவி எதிர்பாராத வகையில் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் உருவான போட்டி குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் தேவையை தாராள மனதுடன் பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி : 
எண்ணமும், செயலும் சிறந்து வெற்றியை தரும். குடும்ப உறுப்பினர் மனதார வாழ்த்துவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்.

பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்களின் சிறந்த செயலுக்கு பாராட்டு பரிசு கிடைக்கும்.

துலாம் : 
மன அமைதியை பாதுகாப்பது அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர் உதவுவார்.

தவிர்க்க இயலாதபடி செலவு அதிகரிக்கலாம். வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

விருச்சிகம் :
மனதில் இனம் புரியாத சங்கடம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை ஊக்கம் தரும்.

தொழில், வியாபாரம் வளர தகுந்த பணிபுரிவீர்கள். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றுங்கள்.

தனுசு : 
செயல்களில் நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உறவினர் உதவி கிடைக்கும்.

குடும்பத் தேவையை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மகரம் : 
சிலர் அதிருப்தியுடன் பேசுவர். பொது இடங்களில் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதால், வளர்ச்சி நிலை சீராகும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

கும்பம் : 
புதிய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். தொழிலில் தாராள உற்பத்தி, விற்பனை உண்டாகும்.

நிலுவைப் பணம் வசூலிக்க, இதமான அணுகுமுறை பின்பற்றுவீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம் : 
நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பது நல்லது.

தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு உதவும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

No comments

Powered by Blogger.