பாரதி, மல்லிகை முன்பள்ளிகளின் கலை விழாவும் பரிசளிப்பும்!!மட்டு- களுவாஞ்சிகுடியில் இயங்கி வரும் பாரதி மற்றும் மல்லிகை முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் இன்று 01/12/2018 சனிக்கிழமை திரு.இராசமாணிக்கம் அரங்கில் சிறுவர் சிறுமியர்களின் பாண்டு வாத்திய அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பமாகி முறையே மங்கல விளக்கேற்றல் பின்னர் தலைமையுரை தொடர்ந்தும் சிறார்களின் கலை நிகழ்வுகளான காவடியாட்டம் குழு நடனம் பண்ணிசை என்பன முறையே இடம்பெற்றதுடன் மாணவச் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டதுடன் அதிதிகள் உரையும் இடம் பெற்றது அதிதிகளாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் திரு. இராசமாணிக்கம் அமைப்பின் நிர்வாகியின் உரை என்பன தொடர்ந்தும் இடம்பெற்றதுடன்.

அதிகளாக ஆலய பூசகர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்ததோடு அனைத்து நிகழ்வுகளும் சீராகவும் நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப் பட்டு சிறப்பான ஒரு விழாவாக நடந்தேறியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எமது ஊடகம் சார்பில் இந்த நிகழ்வினை சிறப்பாக செய்து முடித்த ஆசிரியைகள் மற்றும் பெற்றார் சங்கத்துக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.