தீடீரென தோன்றிய மர்ம நபரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி! மக்கள் சிதறியோட்டம்!!

வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்திருந்த கிறிஸ்துமஸ் சந்தையில் குவிந்திருந்த மக்கள் மீது மர்ம நபர் துப்பாகியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த 10 பேரில் ஒருவர் சுற்றுலாபயணி எனவும், அவரது வயிற்றில் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் மாயமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரைத் தேடும் பணி தொடர்கிறது.


தற்போது ஸ்ட்ராஸ்பர்க் நகரம் பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொலிசார் எந்திர துப்பாக்கியுடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த குறித்த பகுதியானது ஆண்டுக்கு 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் பிரபலமான பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.