கலாசார விழாவும் மருதம் மலர் வெளியீடும்!!

                                                                                                                                - பா.மோகனதாஸ் -
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையின் கலாசார விழா மற்றும் மருதம் சிறப்பு மலர் வெளியீடு என்பன வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் அண்மையில்( 20 ) இடம்பெற்றது.

பிரதேச செயலாளரும் கலாசார பேரவைத் தலைவருமான இ.ராகுலநாயகி தலைமையிலான இவ்விழாவில், தமிழ்த்துறைப் பேராசிரியர் செ.யோகராசா பிரதம அதிதியாகவும் போரதீவுப்பற்று கோட்டக்கல்வியதிகாரி த.அருள்ராஜா, உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சி.சசிக்குமார், கணக்காளர் வ.நாகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

பிரதேச செயலக வளாகத்திலிருந்து ஆரம்பமான பண்பாட்டு பவனி கலாசார விழா இடம்பெறும் வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து பிரதேச செயலக எழுத்தாளர்களால் வெளியீடு செய்யப்பட்ட புதிய மழை எனும் தொனிப்பொருளிலமைந்த கண்காட்சி பிரதம அதிதி மற்றும் பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டது.

மருதம் சிறப்பு மலர் வெளியீடப்பட்டதுடன் நூலின் முதற்பிரதியினை பேரா சி.யோகராஜா, பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டதுடன் சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸன் நயவுரையாற்றியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து உடுக்கை கலைஞர் க.சுந்தரம்பிள்ளை, மரச்சிற்பக் கலைஞர் அ.சுலக்சன், கூத்துக் கலை விற்பனர் க.சுப்பிரமணியம், நாடக விற்பனர் மு.அம்பலவாணப்பிள்ளை,கூத்துக் கலைஞர் க.பாலசுந்தரம், கிராமிய மருத்துவிச்சி திருமதி மாதம்மை பாலிப்போடி ஆகிய மூத்த கலைஞர்கள் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன் தேசிய இலக்கிய விழாவில் பங்குபற்றி முதலாம் இடத்தினை பெற்றவர்களும் நூல்களை வெளியீடு செய்தவர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.

பிரதேச மற்றும் மாவட்ட மட்ட இலக்கிய விழாவில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.