இரண்டுமாத கைக்குழந்தையுடன் கணவனின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கும் இளம் தாய்!!

அண்மையில் வவுணதீவுப் பொலீஸார் கொலை செய்யப்பட்டதன் பின் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனின் விடுதலை வேண்டி அவரது மனைவி இரண்டுமாத கைக்குழந்தையுடன் உண்ணா விரத போராட்டத்தை இன்று திங்கட்கிழமை 17/12/2018 மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்துள்ளார்.

தனது கணவன் சம்பந்தப்படாத இக் கொலை சம்பவத்தில் எந்தவித ஆதாரமும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஏற்கமுடியாது தனது குடும்ப சூழ்நிலை அறிந்து நிரபராதியான தனது கணவனை விடுதலை செய்யவேண்டும் என்பதே இவரது போராட்ட கோரிக்கையாகும்.

தனக்கு குழந்தை பிறந்து இரண்டுமாத காலமே ஆகிய நிலையில் இளம் தாயின் இவ்வாறான நிலை பார்ப்போருக்கு மனவேதனை அளிக்கிறது.

இவ் ஏழை பெண்ணின் நியாயமான போராட்டதிற்கோ அல்லது கைது செய்யப்பட்ட முன்னால் போராளியின் உணர்வுகளுக்கோ மதிப்பளித்து தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனித உரிமை அமைப்புகள் உடனடியான தீர்வினை இந்த இளம் தாய்க்கும் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இணையவாசிகள் மற்றும் பொது மக்களின் தாழ்மையான வேண்டு கோளாக அமைகிறது.

No comments

Powered by Blogger.