மஹிந்த எதிர்க்கட்சி தலைவரானார்! பதவியிழந்தார் சம்பந்தன்!!

சபை முதல்வராக லக்ஷ்மன் கிரியெல்லவும் ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்கவும் மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராகவும் மஹிந்த அமரவீர எதிர்க்கட்சி அமைப்பாளராகவும் நியமனம் - சபாநாயகர் அறிவிப்பு...

ஆனால் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பினார் லக்ஸ்மன் கிரியெல்ல. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து சுதந்திரக் கட்சி நீங்கியதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க கூடாதென தெரிவிப்பு...

இந்த விடயத்தை கவனிப்பதாக சபாநாயகர் தெரிவிப்பு..

ஆனால் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய சுமந்திரன் எம் பி , ஐ ம சு முன்னணி அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டி வந்தால் - வகித்தால் - அவர்கள் எதிர்க்கட்சி பொறுப்புக்கள் எப்படி வகிக்க என்று முடியும் என்று கேட்டு சட்ட நுணுக்கங்களை விளக்கினார். 

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டார்களா என்பதை ஆராய தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படக் கூடாதென்று அவர் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.