கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஆசிரியர்கள் இடமாற்றம் எந்த அடிப்படையில் இடம்பெறுகின்றது?

கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஆசிரியர்கள் இடமாற்றம் எந்த அடிப்படையில் இடம்பெறுகின்றது?

*இலங்கை ஆசிரியர் சங்கம்
*இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம்
*கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம்
*இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

இந்த சங்கங்களின் அடிப்படையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெறும் இடம் மாற்றம் என்பது மூடிய அறையில் கண்ணை மூடிக் கொண்டு செய்யும் செயற்பாடா? குறித்த கடிதத்தில் ஆண் பெண் பால் வித்தியாசமின்றி கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன் ஏற்கெனவே கஸ்டப்பிரதேசங்களில் கடமையாற்றியவர்களை மீண்டும் கஸ்டப்பிரதேசத்திற்கு மாற்றம் செய்வது எந்த வகையில் நியாயம் அப்படி மாற்றம் பெற்றுச் செல்பவர்கள் மீண்டும் குறித்த வலயத்திற்கு வரலாம் என்றால் என்ன உத்தரவாதம் என்ற வினாவும் எழுகின்றது? இந்த இடமாற்றங்களை செய்யும் மேற் குறித்த சங்கங்கள் உண்மையில் ஆசிரியர் நலனில் அக்கறை கொண்டா செயற்படுகின்றனர்?

சகல ஆசிரியர்களுக்கும் இடமாற்றக்கடிதம் மாகாண கல்வித்திணைக்களத்தில் 7ம் திகதி தயாரிக்கப்பட்டு13ம் திகதி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிற்பாடு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் குறித்த இடமாற்றத்திற்கான மேன் முறையீடுகளை 21ம் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது ஆனால் அதிபர்கள்18,19ம் திகதிகளில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இது எந்தவகையில் நியாயப்படும்? ஆனால் சிலஇடமாற்றக் கடிதங்கள் ஓய்வு பெற்றுச் சென்றவர் குறித்த பாடசாலையில் இல்லாதவர்களுக்கு கூட அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது எமது மாகாணத்தின் கல்வித்திறமை நிருவாகத்திறமை எந்தளவில் இருக்கின்றது என்பதற்கு இதனை விட உதாரணம் தேவையா?

இதுவரை ஒரு ஆசிரியருக்காவது இடமாற்றம் குறித்து எந்த விதமான தெளிவூட்டல்களை வலயங்களோ மாகாண கல்வித்திணைக்களமோ சங்கங்களோ தெளிவுபடுத்தவில்லை என்பது வேதனையான விடயம். 

எனவே இதனை சம்பந்தப்பட்ட சங்கங்கள் மாகாண கல்வித்திணைக்களத்தினூடாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்பது அனைவரது வேண்டுகோளாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்விச்சமூகத்தினரின் பதில் என்ன?

பார்வைதொடரும்...

No comments

Powered by Blogger.