விசேட செய்தி! பாராளுமன்ற கலைப்பு தொடர்பான பரபரப்பு தீர்ப்பு வெளியானது!!


பாராளுமன்றக் கலைப்பு தொடர்பான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை சற்று முன் வழங்கியது .

“பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதனால் மனுதாரர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது” என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 

இந்த பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து நவம்பர் 12 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் மறுநாள் 13 ஆம் திகதி - ஏலவே பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியது.

பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான இந்த மனுக்களை விசாரித்த ஏழு நீதியரசர்மார் கொண்ட ஆயமே இன்று ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியது..

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே , விஜித் மலல்கொட , சிசிர டீ ஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட குழாம் மனுக்களை விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.