கால் நடைகளில் மோதுண்டு விபத்துக்குள்ளாவதனை தடுக்க மா நகர சபைகள் இதனை கையாண்டால் என்ன?!

                                                                                                                    - சுதாமன் -
அண்மைக் காலமாக பல இடங்களில் கால் நடைகளில் இரவு வேளைகளில்  வானங்களில் செல்வோர் மோதுண்டு விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதுதான் பெரும்பாலான செய்தி தளங்களிலும் பத்திரிகைகளிலும் தலைப்பு செய்திகளாக வெளிவருகிறது.

விபத்துக்களையும் அதன் பாதிப்பு விபரங்களையும் வெளியிடும் ஊடகங்கள் அதனை தவிர்ப்பதற்கான முழுமையான செயற்படுத்தக்கூடிய ஆலோசனைகளை முன் வைக்கத் தவறுகின்றன எந்தவொரு விடயத்துக்கும் தீர்வு என்பது உண்டு அந்த வகையில் மா நகர சபைகளோ அல்லது பிரதேச சபைகளோ இதற்கான நிரந்தர முடிவினை தற்போது எடுக்க வேண்டிய கடப்பாடு ஏற்பட்டுள்ளது.

மூன்று வகையான நிபந்தனைகளை முன் வைப்பதன் மூலம் இவ்வாறான விபத்துக்களை தவிர்க்கலாம்.....
மேலே பதிவிட்டுள்ள புகைப் படத்தின் பிரகாரம் கால் நடைகளின் கழுத்துப் பகுதியில் ரேடியம் பொருத்தப்பட்ட அல்லது பூசப்பட்ட கழுத்துப் பட்டிகளை அணிவிக்கலாம்.
கால் நடை வளர்ப்பாளர்களுக்கு கடுமையான தண்டப் பணத்தினை நிர்ணயித்து சட்டரீதியாக அறவீடு செய்வது.
கால் நடை வளர்ப்பாளர்களுக்கு சட்ட ரீதியாக வழக்கு தாக்கல் செய்து கடூழிய சிறைத் தண்டனை பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாது கால் நடைகளை பறிமுதல் செய்வதாக தீர்ப்பு அமைதல்.
இந்த மூன்று விடயங்களையும் ஊடகங்கள் மூலமாகவும் ஆங்காங்கே அறிவித்தல் பலகை வைத்தும் முழு வீச்சில் அறிவித்தல் செய்யப்பட வேண்டும் அவ்வாறு செய்வது மட்டுமின்றி உடனடியா அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் நேர்மையான அதிகாரிகளை இவ் விடயங்களை கண்காணிப்பதற்கென நியமிக்கவேண்டும்.

இவ்வாறு செய்து பாருங்கள் ஒரு வாரத்தில் இதற்கான முடிவுகளை நேரடியாக காணலாம்.

No comments

Powered by Blogger.