இரவிலும் தொடர்கிறது போராட்டம்! கைக் குழந்தையோடு அபலைத் தாய்!!

இரவிலும் தொடர்கிறது போராட்டம், இவர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க போராடுவது யார்?

நாட்டின் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக கூறி கொதித்தெழுந்த பெண்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகள் முகநூல் போராளிகள் இந்த குடும்பத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வருவார்களா?

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனின் மனைவி செல்வராணி அவரது ஐந்து பிள்ளைகளுடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது கணவருக்கும் பொலீசார் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவ்வாறு தொடர்பு இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.

தங்களது ஐந்து பிள்ளைகளுடன் கடந்த 18 நாட்களாக உணவுக்கு வழியின்றி கஷ்டத்தில் உள்ளதாகவும் தனது கணவரை அரசாங்கம் விடுதலை செய்யாவிட்டால் தான் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ள போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.