பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு - 700 ரூபாவுக்கு கைசாத்திட தீர்மானம்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவை நிர்ணயித்து கைச்சாத்திட மூன்று தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த ஒப்பந்தத்தில் கைசாத்திடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.