மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்!!வத்தளை- ஹேக்கித்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்களென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காரொன்றில் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களுள் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் மதி ​என்ற பெயரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இருவருடனும் பயணித்த ஸ்டீவன் ராரேந்திரனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது

No comments

Powered by Blogger.