உலகம் வியந்து பார்க்கும் ஒரு ஈழத்து முழு நீள சினிமா " ஒற்றைப்பனைமரம்"!!

கனகராயன்குளத்தில் பிறந்த புதியவன் இராசையா ஈழத்து சினிமா வரலாற்றில் மிக முக்கியமானவர். இவர் ஏற்கனவே "மண்" என்ற ஈழத்துச் சினிமா மூலம் பிரபலமானவர். பல படங்களை இயக்கி பலராலும் பாராட்டப்பட்ட அவர் மீண்டும் "ஒற்றைப்பனைமரம்" என்ற ஈழத்துப்படத்தை இயக்கி முடித்துள்ளார். வெகுவிரைவில் இந்தியாவின் Rsss நிறுவனர் தணிகைவேலின் உதவியுடன் இந்தியாவின் 200 திரையரங்குகளில் வெளியிடப்படக் காத்திருக்கின்றது இந்தப்படம். அந்த வகையில் இவ்வளவு பிரமாண்டமாக வெளியிடப்படும் முதல் ஈழத்துப்படம் என்ற சாதனையை தன்வசமாக்கியுள்ளது இந்தப்படம். இது போதிய ஆதரவு இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் நம் நாட்டின் சினிமாவுக்கு உந்துசத்தியாக அமைந்துள்ளது. அதை விடவும் இந்தப்படம் வெளியிடப்படமுன்னமே உலகளாவிய அளவில் இருபதிற்கும் மேற்பட்ட விருதுகளைத் தன்வசப்படுத்தியுள்ளது.

போரிற்குப்பின்னான வாழ்வியலை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு இலங்கை தணிக்கைக்குழுவின் அனுமதி கிடைத்தால் வருகின்ற பங்குனி மாதம் இலங்கையிலும் இந்தப்பட வெளியிடப்படும்.

இந்தப்படத்தை எழுதி இயக்கியதுடன் முக்கிய பாத்திரம் ஏற்றும் புதியவன் ராசையா நடிக்க அவருடன் நவயுகா, அஜாதிகா புதியவன், ஜெகன் மாணிக்கம், காசி பெருமாள், தனுவன், கபில் நாத், பிரியா, நிர்த்திகா போன்றோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவினை மகிந்த அபேசிங்கவும், இசையினை அஷ்வமித்ராவும் வழங்கியுள்ளனர் எடிட்டிங்கினை பொறுப்பேற்றுள்ளார் சுரேஸ் 

இந்தப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள சாதனைகள்.

1: றோம் இண்டிபென்டன் திரைப்பட விழா; இத்தாலி( அரை இறுதித் தேர்வு) 

2:ஒனிரொஸ் சர்வதேச திரைப்பட விழா; இத்தாலி( சிறந்த திரைப்பட விருது) 

3: இந்தியன்ணி திரைப்பட விழா; இந்தியா( சிறந்த திரைப்படம், ஜூர்ர் விருது) 

4: மூண்டான்ஸ் சர்வதேச திரைப்பட விழா; அமெரிக்கா ( சிறந்த இயக்குனர், அரையிறுதித் தேர்வு)

5: அக்கோலட் சர்வதேச பட விழா; அமெரிக்கா ( தேர்வு) 

6: விம்பிள்டன் லைபிறரி கிளப் விழா; பிரித்தானியா ( தேர்வு) 

7: சி கே எவ் சர்வதேசத் திரைப்பட விழா ; பிரித்தானியா ( சிறந்த முழுநீளப் படம் விருது)

8: லண்டன் சர்வதேச அசையும்பட விருது விழா; பிரித்தானியா ( தேர்வு)

9: ரி எம் எவ் எவ் திரைப்பட விழா; ஸ்கொட்லாந்து (தேர்வு)

10: கோல்ட் மூவி எவாட்ஸ்; பிரித்தானியா ( தேர்வு) 

11: டைறக்ற்லி மாதாந்த திரைப்பட விழா ( தேர்வு)

12: கிறேற் லேக் சர்வதேச திரைப்பட விழா ; அமெரிக்கா ( தேர்வு) 

13: ஜோனெர் செலிபிறேசன் விழா; ஜப்பான்( சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த படம் பரிந்துரை) 

14: யூரோப்பியன் திரைப்பட விழா; ரஸ்யா ( இறுதித் தேர்வு சிறந்த படம்) 

15: ஓல்றனேற்றிவ் திரைப்பட விழா; கனடா( சிறந்த நடிகர் அரையிறுதித் தேர்வு)

16: சவுத் ஒளிப்பதிவு, திரைப்படம் மற்றும் கலை திரைப்பட விழா; சிலி ( சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த கணினி வடிவமைப்பு, சிறந்த திரைப்படம் விருதுகள்) 

17: ரென்றிவ் சர்வதேச திரைப்பட விழா ; இத்தாலி( இறுதித் தேர்வு சிறந்த படம்)

18: ஏ ஆர் எவ் எவ் ; பிரான்ஸ்( குளோப் விருது) 

19: வின்ட் சர்வதேச திரைப்பட விழா; அமெரிக்கா( தேர்வு) 

20:சர்வதேச திரைப்படம் மற்றும் இசை திரைப்படவிழா; குரோசியா ( தேர்வு)

21: அவ்ரோடிற் சர்வதேச திரைப்பட விழா; அமெரிக்கா ( சிறந்த இயக்குனர் விருது) 

22: ஹோஸ்ற் அண்டகிறவுண்ட் சர்வதேச திரைப்பட விழா; அமெரிக்கா( கௌரவ தேர்வு) 

23: யூகே மாதாந்த திரைப்பட விழா; பிரித்தானியா ( தேர்வு) 

24: சினிபெஸ்ற் நொவாலா விழா; இந்தியா ( அரையிறுதித் தேர்வு) 

25: ஹொலிவூட் கில்ட் விழா; அமெரிக்கா( சிறந்த படம், சிறந்த கணினி வடிவமைப்பு விருதுகள்) 

26: நியூயோக் சர்வதேச திரைப்பட விழா; அமெரிக்கா( அரையிறுதித் தேர்வு)

27:யுரேசியா சர்வதேச திரைப்பட விழா; ரஸ்யா ( இறுதித் தேர்வு) 

28: மைன்ட் பில்ம் சர்வதேச திரைப்பட விழா; அமெரிக்கா( சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் விருது) 

29: ரொப் இன்டி திரைப்பட விழா( ஒறிஜினல் ஐடியா விருது) 

30: கட்டிங் எட்ஜ் திரைப்பட விழா; அமெரிக்கா( தேர்வு) 

31: பிளாஸ்ற்ஓவ் திரைப்பட விழா; அமெரிக்கா( இறுதித் தேர்வு)

32:நவாடா சர்வதேச திரைப்பட விழா; அமெரிக்கா( சில்வ ஸகிறீன் விருது) 

33: அமெரிக்கன் பில்மாற்றிக் விருது விழா; அமெரிக்கா( தேர்வு) 

34:அன்ராயா சர்வதேச திரைப்பட விழா; ரேக்கி ( இறுதித் தேர்வு)

35: நிய நஸ்ரத் சர்வதேச திரைப்பட விழா; ஸ்ரேல் ( அரையிறுதித்தேர்வு)


No comments

Powered by Blogger.