தாழங்குடா மயானத்துக்கு முன்பாக பனை மரத்தில் வட்டா ரக வாகனம் மோதி விபத்து!!

இன்று 23/01/2019 பிற்பகல் 03:00 மணியளவில் தாழங்குடா மயானத்துக்கு முன்பாக உள்ள பனை மரமொன்றில் வட்டா ரக கன்ரர் வாகனமொன்று சாரதியின் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மிக வேகமாக பயணித்து மோதியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி பாரியளவில் பாதிப்புக்குள்ளாகவில்லை என்றும் உதவியாளர் மிகுந்த காயங்களுடன் பொது மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலை அவசர ஊர்தி மூலமாக மட்டு போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் குறித்த வட்டா ரக கன்ரர் வாகன உரிமையாளர் மட்டு மாமாங்கப் பகுதியினை சேர்ந்தவரெனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார் மேலதிக தகவல்கள் விரைவில்....
No comments

Powered by Blogger.