விளக்கமறியலில் உள்ள தென்கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு விசேட அனுமதி!!

ஹொரவ்பொத்தான கிரலாகல புராதன விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதி வருட மாணவர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புராதன விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (24) கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

No comments

Powered by Blogger.