நாளை மட்டு நகரில் முதன் முறையாக இலவசமாக பேலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சி! அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்!!

மட்டுமா நகரில் முதன் முறையாக பேலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சி! நாளை 27.01.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 09.30 மணிக்கு மட்டு மஹாஜனக் கல்லூரி அரங்கிலே தமிழ் ஓசை மற்றும் மாருதம் இணையத் தளம் என்பனவற்றின் ஊடக அனுசணையோடு அனுமதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வினை வாழ்ந்திடுங்கள் மக்களே!


பேலியோ உணவுமுறை என்றால் என்ன? 

பேலியோ உணவுமுறை என்றால் ஆதிகால உணவுமுறை என்று பொருள். மாவுச்சத்து (Carbohydrate) உணவுகளைக் குறைத்து, நல்ல கொழுப்பு மற்றும் புரதம் சார்ந்த உணவுகளை உட்கொள்வதே பேலியோ உணவாகும். 

மாவுச்சத்து எனப்படும் சர்க்கரை உணவுகளால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் கீழே உள்ள பட்டியலின் மூலம் பார்ப்போம். இவையனைத்தும் நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகும்.

01) உடல் பருமன்
02) சர்க்கரை வியாதி
03) இரத்த அழுத்தம் 
04) கொழுப்பு
05) தைராய்டு
06) சொரியாசிஸ்
07) உடம்பு வலி, முட்டி வலி
08) யூரிக் ஆசிட் பிரச்சினைகள்
09) ஆஸ்துமா பிரச்சினைகள்
10) கிட்னி, லிவர் பிரச்சினை 
11) மகளிர் சார்ந்த பிரச்சினைகள்
12) இரத்தம் குறைவு
13) கால்சியம் குறைவு
14) இரும்புச் சத்துக் குறைவு
15) வைட்டமின்-டி குறைவு 
16) மாரடைப்பு ஏற்படுதல் 
17) புற்றுநோய் அதிகரித்தல் 
18) வலிப்பு ஏற்படுதல்

உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நாம் சாப்பிடும் உணவுகளே காரணம். இந்த உணவுகளை நிறுத்தி தேவையான மாவுச்சத்து, நல்ல கொழுப்பு, புரதம், கனிமச்சத்து, உயிர்ச்சத்துக் கொண்ட பேலியோ உணவுகளை உட்கொண்டால் மேற்கூறிய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட முடியும். 

இந்த உணவில் மாத்திரை, மருந்துகள் கிடையாது. பவுடர், லேகியம் கிடையாது. இந்த உணவுமுறைக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அனைத்துமே இலவசம். நம் கையால், நாமே சமைத்து சாப்பிடும் எளிய உணவுகளே தான் இந்தப் பேலியோ உணவுமுறை!

இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்த உணவுமுறை அமெரிக்காவில் தோன்றியது. பின்னர் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில், பல பெயர்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இதை அறிமுகம் செய்து வைத்தவர் அமெரிக்க வாழ் தமிழர் திருமிகு நியாண்டர் செல்வன் அவர்கள். தற்போது தமிழ்நாட்டில் இந்த உணவுமுறையால் பல இலட்சம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்த உணவுக் குறித்த ஆலோசனைகள் இலவசமாகக் கிடைப்பது, உணவுகள் தவிர வேறு எந்தச் செலவுகளும் இல்லாதது, நமக்கான நோய்கள் அனைத்தும் கட்டுக்குள் வருவது அல்லது குணமாவது, அதுவும் ஓரிரு மாதங்களிலே இதன் பயன்கள் கிடைப்பது என்பதெல்லாம் இந்த உணவுமுறையின் சிறப்பு அம்சமாகும்.

என்ன வியப்பாக இருக்கிறதா? மேற்கண்ட நோய்களுக்கு நாம் சாப்பிடும் உணவுகளே காரணமாக இருக்கிறது. அதை நிறுத்தும் போது, நோய்களும் காணாமல் போகிறது! 

சரி! பேலியோ உணவுகளில் என்னென்ன சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? இந்த உணவைப் பின்பற்றும் முன் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன? சைவம், அசைவம் இரண்டையும் எப்படிப் பின்பற்றுவது? எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவுகள் தானா? இது விலை உயர்ந்த உணவுமுறையா? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொள்வது மிக, மிக அவசியமாகும்.

இதுகுறித்து நாளை 27 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறும் பேலியோ நிகழ்ச்சியில் விரிவாகப் பேசலாம்! 
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்துங்கள்.

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட நோய்களின் உலகை வேருடன் சாய்ப்போம்!!

No comments

Powered by Blogger.