பாடசாலைகளில் பணம் வசூலிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - கல்வி அமைச்சர்!!

பாடசாலைகளில் பெற்றோர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலவசக் கல்வியின் நன்மைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் மீது தேவையில்லாத அழுத்தங்களைக்கொடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகளுடான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இதுதொடர்பாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெற்றோர்களிடம் இருந்து பாடசாலை நடவடிக்கைகளுக்காக பணம் சேகரிக்கப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பதற்காக அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறான முறைப்பாடுகளை கே.ஜீ.சீ.மகேஷிக்கா, உதவி கல்விப் பணிப்பாளர், தேசிய பாடசாலைக் கிளை, கல்வியமைச்சு, இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கமுடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.