போக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்!!வீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

வீதி விபத்துக்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது இனங்காணப்படாத வாகனங்களினால் விபத்துக்குள்ளாகி மரணித்தவர்களில் நான்கு குடும்பங்களுக்கு 2 இலட்சம் ரூபாவும், பாரிய காயங்களுக்குள்ளான இருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாவும் மற்றும் 20 பேருக்கு நஷ்ட ஈடும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.