மாலி குண்டு வெடிப்பில் இரு இலங்கை படையினர் பலி!!

மாலியில் ஐநாஅமைதிப்படையினர் மீது இடம்பெற்ற குண்டுதாக்குதலில் இலங்கை இருவர் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

கொல்லப்பட்ட இலங்கை படையினரில் ஒருவர் இராணுவ கப்டன் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஐநா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள இலங்கை படையினர் மாலியின் டௌன்ட்ஜா என்ற பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை அவர்களது கவசவாகனத்தை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் இடம்பெற்றதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

இந்த தாக்குதலில் கப்டன் தர அதிகாரியொருவரும் மற்றொரு இராணுவீரரும் கொல்லப்பட்டுள்ளதை இலங்கை இராணுவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

காயமடைந்த மூன்று இலங்கை இராணுவத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐநா இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.