கிழக்கில் மட்டு நகர் மற்றும் பல பகுதிகளில் பிரயாணங்கள் தொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!!

மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஏனைய தமிழர்கள்வாழும் கிழக்கின் பல இடங்கள் கிழக்கின் ஆளுனராக ஹிஸ்புல்லா அவர்களை நியமித்தமைக்கு எதிராக பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப் படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இன்று அதிகாலையில் வீதிகளில் ரயர்கள் எரியூட்டப் பட்டும் அதிகாலை பயணத்தில் ஈடுபட்ட பேருந்துகளை நோக்கி கற்கள் பறந்ததாகவும் மிகவும் இறுக்கமாக ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும், மட்டுநகர், கல்லடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, வெல்லாவெளி மற்றும் வாழைச்சேனை போன்ற பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் அவர்களது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர். வீதிகளிலும் சன நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலே காணப்படுகின்றன.

இருந்த போதிலும் இலங்கை போக்குவரத்திற்குச் சொந்தமான பஸ்கள் சேவையிலீடுபடுவதையும் ஒரு சில தனியார் பஸ்கள் சேவையிலீடுபடுவதையும் அவதானிக்க முடிவதோடு, பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதையும் அதானிக்க முடிகின்றது.

அரச காரியாலயங்களுக்கு உத்தியோகஸ்த்தர்கள் சென்றுள்ளதோடு பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரசேங்களில் பொதுவாக அனைந்து நடவடிக்கைளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாழைச்சேனையிலும் ஹர்த்தால் : இ.போ.ச. பஸ் வண்டி மீது கல்வீச்சு ; சாரதியுட்பட மூவர் காயம்


கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை கடையடைப்பு மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் உணர்வாளர் மற்றும் எல்லாளன்  அமைப்பினால் இவ் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஹர்த்தாலினை முன்னிட்டு தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு காணப்படுறது. அரச திணைக்களங்கள் திறக்கபட்ட போதிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்பட்டது.

குறைந்த எண்ணிக்கையிலான போக்குவரத்து சேவை இடம்பெற்றது. இதேவேளை இன்று அதிகாலை வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சாலைக்கு சொந்தமான பஸ் வந்தாறுமூலை பிரதேசத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களின் கல் வீச்சுக்கு இலக்காகியுள்ளது. இதனால் பஸ்சின் முன் கண்ணாடி சேதமடைந்ததுடன் பஸ் சாரதி பயணிகள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இவர்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களான கோறளை மேற்கு, ஓட்டமாவடி,கோறளை மத்தி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் வழமைக்கு மாறாக திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன் பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்குகின்றன.No comments

Powered by Blogger.