பின்தங்கிய மாணவர்களின் கல்வியை முன்னெடுக்கும் கல்விநிலைய தலைவரின் இல்லம் மீது தாக்குதல்!!

பின்தங்கிய மாணவர்களின் கல்வியை முன்னெடுக்கும் கல்விநிலைய தலைவரின் இல்லம் மீது தாக்குதல்.விசாரணை நடாத்தி குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள்...

மூதூர்த் தொகுதி கிளிவெட்டி பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையத்தின் தலைவர் க.தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டின் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளது.பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வியினை உயர்த்தும் நோக்கோடு மாலை நேர வகுப்புக்கள் நடாத்தி வரும் கிஸ்டோ கல்வி நிலையத்தின் தலைவரது இல்லத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தாக்கப்பட்டுள்ள சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மூதூர் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுவருவதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் இச்சம்பவம் குறித்து மூதூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

No comments

Powered by Blogger.