எச்சரிக்கை! வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..! காரணம் தெரியுமா..?

உருளைக்கிழங்கு முதல் மீன் வரை நமக்கு வேக வைத்து பரிமாறுவதை விட வறுத்து கொடுத்தால் தான், அதிகம் விரும்பி சாப்பிடுவோம். பெரும்பாலும் குழந்தைக்குகளுக்கும் வறுத்த உணவுகள் என்றால் அலாதி பிரியம். வறுத்த அல்லது பொரித்த உணவுகளை நாம் எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டு கொண்டே இருப்போம். மீன், சிக்கன், உருளைக்கிழங்கு போன்ற உணவுகள் வறுத்து சாப்பிடுவதால் பலவித ஆபத்தை உண்டாக்குகிறதாம்.


முக்கியமாக இது போன்ற உணவுகள் அவற்றின் தன்மையில் இருந்து மாறி, நமது உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். இதனால் மரணம் தான் நமக்கு பரிசாக கிடைக்கும் என தற்போதைய ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன. வேக வைத்த உணவுகளில் சத்துக்களில் பாதி கூட இந்த வறுத்த உணவுகளில் இல்லை என்றே கூறலாம். ருசிக்காக சாப்பிடும் இது போன்ற உணவுகளில் பலவித அபாயங்கள் கலந்துள்ளன. வறுத்த அல்லது பொரித்த சிக்கன், மீன் சாப்பிடுவதால் மிக விரைவிலே மரணம் ஏற்படுமாம். இதன் சாத்திய கூறுகளை முழுவதுமாக விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். வாங்க, அவற்றை தெரிந்து கொள்வோம்.

சாப்பாட்டு சங்கம்..! சாப்பாடு- இந்த ஒற்றை வார்த்தைக்கு பலரும் மடங்கி விடுவோம். என்னதான் கோபம், கடுப்பு, வெறுப்பு இருந்தாலும் அதை சாப்பாட்டில் காட்ட கூடாது என்றே கூறுவார்கள். இது உண்மையும் கூட. சாப்பாட்டை சாப்பிடுவது முக்கியமல்ல. சாப்பிடும் உணவு சத்தானதா..? என்பதை அறிந்து கொண்டு உண்ண வேண்டும்.

உணவும் விஷமும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. சாப்பிட கூடிய உணவின் தன்மை மாறினால் நேரடியாக உடல் ஆரோக்கியத்தை உருக்குலைத்து விடும். பெரும்பாலும் உணவை வறுத்து, பொரித்து சாப்பிடும் போது அதன் இயற்பியல் தன்மை திரிந்து விஷயமாக கூட மாறலாம்.

1 லட்சம் பேரின் ஆய்வு.! உணவுகளை பற்றிய ஆய்வில் தான் இந்த திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது. அதாவது வறுத்த சிக்கன், பொரித்த மீன் போன்றவற்றை சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோரை வைத்து ஆய்வு நடத்த பட்டது. இவர்கள் எல்லோரும் பொறித்த உணவுகளை அதிகம் உண்பவர்கள். இந்த ஆய்வில் இவர்களின் அன்றாட செயல்களையும் ஆய்வு செய்தனர்.
பாதிப்பு..? அன்றாட உணவில் வறுத்த சிக்கன், மீன் முதலிய உணவுகளை சாப்பிட்டு வருவோரை முழுவதுமாக ஆய்வு செய்ததில் அதிர வைக்கும் உண்மை வெளி வந்தது. அதாவது, இது போன்ற உணவுகள் சாப்பிடுவதால் பல உறுப்புகள் பாதிக்கப்படுகிறதாம். இதனால் இதய நோய்கள், சர்க்கரை வியாதி, புற்றுநோய் அபாயம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
எவ்வளவு சதவீதம்..? சர்வ சாதாரணமாக நாம் இந்த வகை உணவுகளை சாப்பிட்டு விடுகிறோம். அதன் பின் இவற்றால் மரணம் பரிசாக கிடைப்பது தான் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. வறுத்த சிக்கன், மீன் சாப்பிடுவோருக்கு 13 சதவீதம் மரணம் விரைவிலே நிகழ வாய்ப்புள்ளதாம்.
ஆண்களா..? பெண்களா..? வறுத்த, பொரித்த சிக்கன் மற்றும் மீன் சாப்பிடுவதால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே மேற்சொன்ன அபாயம் அதிக அளவில் உள்ளதாம். இதே நிலை தொடர்ந்தால் உங்களின் மனைவி அல்லது காதலிக்கு மரணம் சீக்கிரமே வர கூடும்.
யாருக்கு..? இந்த ஆய்வின் படி 50 முதல் 79 வயதில் இருக்கும் பெண்களுக்கு 8 சதவீதம் மரணம் விரைவிலே ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், இதற்கும் குறைந்த வயதில் உள்ளோருக்கு 13 சதவீதம் மரணம் இளம் வயதிலே வருவதற்கான சாத்திய கூறுகளை இவை உண்டாக்குகினற்ன.
தவிர்ப்பீர் தற்போதைய ஆராய்ச்சியின் படி வறுத்த பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மரணம் இளம் வயதிலே ஏற்பட கூடும். ஆதலால், வறுத்த சிக்கன், பொரித்த மீன், மேலும் வறுத்த எந்தவித காய்கறிகளை கூட சாப்பிடுவதை தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்.
தீர்வு..! நாம் உண்ணும் உணவில் எந்த வித எதிர்மறையான பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலே போதும். சாப்பிடும் போது கட்டுக்கடங்காத காளை போல பாயாமல், பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து உண்டால் நலமாக வாழலாம்.

No comments

Powered by Blogger.