நேற்றைய மா நகர சபை அமர்வில் கல்லடிப் பாலத்தில் இடம்பெறும் அனர்த்தங்களை தடுப்பதற்கான தீர்மானம்!!

மட்டக்களப்பு நகரத்தினது ஓர் அடையாளமாக இருக்கின்ற கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் 15ஆவது பொது அமர்வில் மூன்று முன்மொழிவுகள் முதல்வாரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக சபையினாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி கல்லடிப் பாலத்தில் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்து கொடுப்பதன் ஊடாக அவ்விடத்தை தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும் பயன்பாட்டிற்குமான இடமாக மாற்றுவதென்றும், 

இவ்வாறான தற்கொலைக்கான மனநிலைக்குள் செல்கின்றவர்களை உள ஆற்றுப்படுத்துகைகளின் ஊடாக அவர்களது மனநிலையை மாற்றம் செய்து கொள்வதற்கான வலைதளம் (website) மற்றும் “செயலி” App என்பன உருவாக்கப்பட்டு அதனை கையடக்க தொலைபேசியினூடாக பயன்படுத்துவதற்கான நடைமுறை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பாவனைக்கு விடுதல் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு வசதியாக 24 மணி நேர படகு ரோந்து சேவையை அப்பகுதியில் ஆரம்பிப்பதற்கும் சபையினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்மானம் குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில்......

கல்லடி பால பிரதேசத்தினை சுற்றுலாத் தளமாக அறிவித்து அதற்குள் பிரவேசிப்பதற்கு கட்டணமாக சிறு தொகையினை ரசீதுகளை வழங்கி அனுமதித்து விட்டு இரண்டு அல்லது மூன்று காவலாளர்களை பணிக்கு அமர்த்தி 24 மணி நேர சேவையாகவும் அதோடு இணைந்த கண்காணிப்பு கமெராவினையும் பொருத்தி தன்னம்பிக்கை தரக்கூடிய வாசங்கள் பொறித்த பதாதைகளை ஆங்காங்கே காட்சிப் படுத்தி மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற மட்டு நகரின் தொன்மைகளை பறை சாற்றும் அடையாளப்படுத்தும் விற்பனை நிலையங்களை பாலத்தினுள் அனுமதிக்காமல் நுழை வாயிலின் முன்னுள்ள பகுதிகளில் அமைக்க அனுமதி வழங்குதல் பாலத்தினுள் அனுமதித்தால் குப்பை கூழங்களை எப்படியாவது ஆற்றினுள் வீசி கூவம் ஆறாக மாற்றி விடுவார்கள் அதனை கட்டுப்பதுத்துவது மிகக் கடினம் அது மட்டுமல்ல அசுத்தப் படுத்துபவர்களை கண்காணிப்பு கமரா மூலம் இனங்கண்டு உடனடி தண்டப்பணம் அறவிடும் செயல்திட்டத்தினையும் நடை முறைப்படுத்தி சுற்றுலாத் தளத்திற்கே உரித்தான கட்டமைப்புடன் செயற்படுத்தினால் இந்த நடைமுறை பாரிய வெற்றியினையும் அதே போல மா நகர சபைக்கு வருமானத்தையும் ஈட்டித் தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துகளும் இல்லை என தெரிவித்தார்கள்.

No comments

Powered by Blogger.