கல்முனை ஆதார வைத்தியசாலையில் "RELOAD" இயந்திர சேவை !!

கல்முனை ஆதார வைத்தியசலையின், வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க DIALOG நிறுவனத்தினால் "Bill payment" ,"Reload" , மின்சாரக்கட்டணம், நீர்க்கட்டணம் என்பவற்றை வைத்தியசாலையினுள்ளே செலுத்தக்கூடிய வகையில் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. 

அதிதீவிர சிகிச்சைப்பிரிவின் முன்னால் அமைந்துள்ள இவ் இயந்திரத்தினால், பல வகையான நன்மைகள் பெறக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வைத்தியசலையின் சேவையாளர்களின் நன்மையைக் கருத்திற் கொண்டும், அவசர வேளையில் கையடக்க தொலைபேசியில் நிலுவைகள் இல்லாத காரணத்தினால் சேவைநாடிகள் தங்களின் வீடுகளுக்கு தொடர்பை ஏற்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில், ஏற்படும் அவல நிலையையும் நீக்கும் முகமாகவும், இவ்வியந்திரத்தின் செயற்பாடு தேவை என்பதனை உணர்ந்து இவ் வேண்டுதல் கோரப்பட்டதாக தெரிகிறது.

இச் சேவை மூலம் அனைவரும் நன்மை பெறலாம் என்று பயனாளிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.


இதேவேளை இலங்கை வங்கியின் பணம் பெறும் இயந்திர சேவையும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிகிறது.

No comments

Powered by Blogger.