மன்னார் எலும்புகள் 1499-1719 காலத்துக்குரியவை


மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புகள், 1499-1719 ஆம் ஆண்டுகளுக்குரியவை என, அமெரிக்க புளோரிடாவில் பீட்டா அனாலிடிக் நிறுவனத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள காபன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காபன் அறிக்கையை பிரசித்தப்படுத்துமாறு மன்னாள் நீதவான் ரி.சரவணராஜா, இன்று (7) விடுத்த கட்டளையை அடுத்து, அவ்வறிக்கை பிரச்சித்தப்படுத்தப்பட்டது. அதிலேயே மேற்கண்டவாறுத் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, மன்னார் மனித புதைகுழி வழக்கை, அழைப்பு மனுவின் ஊடாக, நேற்று அழைப்பித்தார். இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.No comments

Powered by Blogger.