மண்டூர் பாலமுனை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் மகா சிவராத்திரி யாகமும் பூசை வழிபாடுகளும்!!

ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன்..! நாளை 04/03/2019 சிவராத்திரி மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூர் பாலமுனைக் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் மகா சிவராத்திரி பூஜை மற்றும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட 108 மூலிகைகள் கொண்டு மகா யாகம் என நான்கு சாமப் பூஜைகளும் முறையே 04/03/2019 திங்கட்கிழமை மாலை 05:00 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை வரை பூஜை யாகம் பஜனை ஆன்மீக அருளுபதேசங்கள் என ஆன்மீகக் குரு மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மந்திர பாராயாணம் செய்ய மகா சிவராத்திரி வழிபாடுகள் நிகழும்.

இந்துக்களின் மிக முக்கியமான வழிபாடாக சிவராத்திரி வழிபாடு காணப்படுகிறது ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் நிகழவிருக்கும் மேகா சிவராத்திரி வழிபாடுகளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் பட்டு கண்ணீர் மல்கி பக்தி பரவசத்தில் திளைப்பதனை காணவும் முடியும் குரு அருளும் திருவருளும் ஒன்றிக்கும் போது முழுமையான இறையின்பத்தை அனுபவிக்கமுடியும் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா.. 

பொதுவாக மாசி மாதத்தில் வரும் இந்த சிவராத்திரி ஆனது மஹா சிவராத்திரி என்று அழைக்கப் படுகின்றது. இந்த சிவராத்திரி வருவது திங்கள் கிழமை. இது சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று சித்தர்கள் திங்கள்கிழமை மஹாசிவராத்திரி வந்தால் மகிழ்வார்களாம். இதற்கான காரணம் மஹா சிவராத்திரி அன்று 4 கால பூஜை செய்து முள்ளந்தண்டை நேர் நிறுத்தி கண் விழித்திருந்தால் கைலாயம் செல்லலாம் என்பது சிவன் ஆசியாம்.

இம்முறை திங்கள் கிழமையில் வருகிறது. எனவே பக்தர்களே தவறாது இந்த சிவராத்திரி வழிபாட்டில் தவறாது கலந்து கொண்டு சிவனருளை பெற்றுய்யுங்கள்.


No comments

Powered by Blogger.