கோறளைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் பயிற்சிப் பாசறை!!

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கோறளைப் பற்று தெற்கு பிராந்தியத்துக்கான வேள்ட் விசன்(World vision) நிறுவனத்தின் அனுசரணையுடன் அப்பிரதேச 50 இளைஞர் யுவதிகளுக்கான மாற்றத்துக்கான இளைஞர்கள் எனும் மகுட வாசகத்தோடு இரண்டு நாள் வதிவிடத்துடன் கூடிய பயிற்சி நெறி சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் இன்று 16/03/2019 சனிக்கிழமை கிரான் பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு.T.விந்தியன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வுகு கிரான் பிராந்திய வேள்ட்விசன்(World vision) முகாமையாளர் ஹிந்து றோகாஸ் அவர்களும் திட்ட இணைப்பாளர் k.லிங்கராஜா அவர்களும் அத்துடன் போசாக்கு மற்றும் சுகாதாரத் திட்ட இணைப்பாளர் திரு.P.லோகிதராஜா அவர்களும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்கள் தொடர்ந்தும் பயிற்சி பாசறை நாளை ஞாயிறு 17/03/2019 வரையும் வதிவிடப் பயிற்சியாக நடைபெறும்.


இந்த வதிவிடப் பயிற்சி பாசறையில் அவர்களுக்கு பொருளாதாரம் மூலம் தமது பிரதேசத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு அதனை தக்க வைத்து ஒரு சிறந்த முகாமைத்துவ பண்பாளர்களாக பரிணமித்து வெற்றியீட்டுவதற்கான உள வள ஆலோசனைகள் அடங்கிய தலைப்புகளில் விரிவுரையாளர்களான A.ஜெகன், Tவில்வஜித்தன் அவர்களின் ஆக்கபூர்வமான விரிவுரைகளும் இடம்பெறவுள்ளன தொடர்ந்தும் போசாக்கு சம்பந்தமாகவும் கணனி தொழில் நுட்பம், இணைய வலையமைப்பு என விரிவுரைகளும் சனிக்கிழமை இரவு K.ரவீந்திரா அவர்களின் தலைமையில் இசையின் ரசனையும் எனும் நிகழ்வு இளைஞர்களின் கலைத் திறனை ஊக்குவிப்பதற்காவும் இந்த பயிற்சி பாசறை நிகழ்வானது இடம்பெறவுள்ளது ஞாயிறு பிற்பகல் சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வோடு இனிதே நிறைவுறவுள்ளது.

இந்த நிகழ்விலே பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு.T.விந்தியன் அவர்கள் தலைமை உரையாற்றும் போது...


யுத்தத்தாலும் இயற்கை அழிவுகளாலும் பாதாக்கப்பட்டு பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்தித்துள்ள எம் தலைமுறை இளைஞர்களுக்கு இவ்வாறான தொழில் வழிகாட்டி உளவள வழிகாட்டல் என பன்முகப்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் மதிப்பிற்குரிய எமது நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கீழ் உள்ள அமைச்சினூடாக இந்த செயற்திட்டங்கள் மாவட்ட ரீதியாக மட்டுமல்லாது தேசிய ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எதிர்வரும் காலங்களில் தேசிய ரீதியான செயற்திட்டங்களில் எமது மாவட்டத்தை மட்டுமல்லாது கோறளைப்பற்று பிராந்தியத்திற்குட்ட பல இளைஞர் யுவதிகளையும் இத்திட்டத்தில் இணைத்திட எண்ணியுள்ளோம் இவ்வாறு அவர் உரையாற்றினார் 


பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு.T.விந்தியன் அவர்களின் அயராத முயற்சியினால் பல இளைஞர் யுவதிகள் இவ்வாறான செயற்திட்டங்களில் பங்குபற்றி சிறந்த பிரஜைகளாகவும் நாட்டின் மற்றும் பிரதேசத்தின் பொருளாதாரரீதியான வளர்ச்சிகளிலும் பங்களிக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
No comments

Powered by Blogger.