காத்தான்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 8 கிராம் ஐஸ் (ice) போதைப் பொருளுடன் 44 வயதுடைய ஆண் ஒருவரை நேற்று புதன்கிழமை (10) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் 

நீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையில் போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மதுரங்க உட்பட்ட குழுவினர் சம்பவதினமான நேற்று புதன்கிழமை (11) இரவு புதிய காத்தான்குடி கர்பலா பிரதேசத்தில் குறித்த நபரை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது அவரிடமிருந்து 8 கிராம் 600 மில்லிக்கிராம் ஐஸ் (ice) போதைப்பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர் 

இச் சம்பவத்திவ் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post