பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் பின்னணியில் யார்? வெளியிடத் தயார்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வாட்ஸ் அப்பில் வெளியிட உள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை தப்பிக்கவைக்கும் நோக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்தவை குறித்த உண்மையை வெயிடுவேன் என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.