மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


எந்த கட்சியிலும் நான் இல்லை!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் (அ.ம.மு.க.) நடிகர் விவேக் இணைந்துவிட்டார் என்றும், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று நடிகர் விவேக் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயக கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்

No comments

Powered by Blogger.