இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையின் சில மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது நாளைய தினம் இவ்வாறான காலநிலை நிலவும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடமேல் மாகாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, குறித்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.