இலங்கையின் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!


போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகளை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
Image result for sri lanka traffic police
போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலை சுட்டிக்காட்டி பத்திரிகையொன்று இன்றைய தினம செய்தி வெளியிட்டுள்ளது.

  1. 25,000 ரூபா அபராதம் - வாகன சாரதி பத்திரம் இல்லாமல் பயணித்தல், மது மற்றும் போதைப்பொருள் பாவனையின் பின் வாகனத்தை செலுத்தல், புகையிரத கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தல் உள்ளிட்ட ஏழு விதி மீறல்களுக்கு..
  2. செல்லுபடியற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தல் மற்றும் வாகனம் செலுத்துவதற்குரிய வயதின்றி வானத்தை செலுத்த முற்படல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் அதிகரிப்பு..
  3. அதிக வேகமாக வாகனத்தை செலுத்தல், வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்தல் என்பவற்றுக்கான அபராதங்களும் அதிகரிப்பு..
இவற்றின் மூலம் குற்றவாளியாக அடையாளம் காணப்படுவோருக்கு 25000 ரூபா - 30000 ரூபா வரையில் அபராதம்.

இரண்டாம் தடவை அதே குற்றங்களை இழைப்பாராயின் 30000 ரூபா - 40000 ரூபா அபராதத்துடன், 6 மாதங்கள் வரையில் சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும்.

மூன்றாவது தடவை எனில் 40000 ரூபா - 50000 ரூபா அபராதத்துடன், 12 மாதங்கள் வரையில் சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும்.

வேகம் (வரையறுக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகம்)
20 வீதம் அதிகம் எனில் 3000 - 5000 ரூபா
30 வீதம் அதிகம் எனில் 5000 - 10000 ரூபா
50 வீதம் அதிகம் எனில் 10000 - 50000 ரூபா

இவ்வாறு அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.