மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மீண்டும் மது அருந்தும் ஓவியா!!

ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் அவர் மது அருந்தும் காட்சிகளில் நடித்தது சர்ச்சையானது. இந்நிலையில் அவர் அடுத்து நடித்துள்ள கணேசா மீண்டும் சந்திப்போம் படத்திலும் மது அருந்தும் காட்சியில் மீண்டும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் பிருத்வி பாண்டியராஜனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். படத்தை ரத்தீஷ் எரட் இயக்க அருண் விக்ரமன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

படம் பற்றி ரத்தீஷ் எரட் கூறும்போது, ‘ஒரு பைக்கை மையமாக வைத்து உருவான கதை. ஒரு பைக்கால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் காமெடியான படமாகி இருக்கிறது. முதல் பாதி மதுரையிலும் இரண்டாம் பாதி சென்னையிலும் நடக்கிறது. பிக் பாசுக்கு முன்பே ஓவியா ஒப்பந்தமான படம்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்து நடித்து கொடுத்தார். மது அருந்தும் காட்சி கதைக்கு தேவைப்பட்டது. அவர் கடும் மன அழுத்தத்தில் இருக்கும்போது மது அருந்துவது போன்று காட்சி இருக்கும். படத்துக்கு சென்சாரில் யூ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். கணேசா மீண்டும் சந்திப்போம் பெயருக்கான காரணம் சஸ்பென்ஸ். படம் பார்த்தால் புரியும்’. இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.