கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவரின் உள்ளாடைக்குள் சிக்கிய மர்மம்!

இலங்கை பிரஜையொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
68 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முற்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து இன்று முற்பகல் 11.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல். 122 விமானத்திற்கூடாகவே குறித்த நபர் நாட்டுக்கு வந்துள்ளார்.
இவரிடம் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது ஒரு கிலோகிராம் நிறையுடைய 05 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் பெருமதி 68 இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 40 வயதுடைய கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்தவர் என சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.