நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த லாரி டிரைவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் கொளத்தூர் மூலக்காடு அடுத்த விராலிகாடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்தவர் ரவி(45). இவர் ஒரு லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார் கருத்து வேறுபாட்டின் காரணமான அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார் இந்நிலையில் ரவி, தனது நண்பரான நாச்சிமுத்து என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார் இதனை அறிந்த நாச்சிமுத்து ரவியை எச்சரித்துள்ளார். ஆனாலும் ரவி திருந்திய பாடில்லை.

இதனால் கடும் கோபமடைந்த நாச்சிமுத்து, நள்ளிரவு ரவி உறங்கிக்கொண்டிருந்த போது அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தார் இச்சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து நாச்சிமுத்துவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.