பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் - அந்நாட்டு மக்களின் நெகிழ்ச்சியான செயல்!!


பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் தொடர்பில் அந்நாட்டு மக்கள் அதீத அக்கறை கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் Pinner பகுதியிலுள்ள கடையொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் இரக்க குணம் கொண்ட இலங்கையர் மீது Pinner பகுதி மக்கள் அன்பு கொண்டிருந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உதவி செய்யும் நோக்கில் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடினமான இந்த நேரத்தில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்திற்கு உதவி தேவைப்படும். அதனை கருத்திற் கொண்டு நிதி சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 50902 பவுண்ட் நிதி சேகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

52 வயதான இலங்கைத் தமிழரின் நெஞ்சில் கத்தியால் குத்தியமையினால் அவர் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.