தவறான Uber காரில் ஏறிச் சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்!

அமெரிக்காவில் தாம் அழைத்த Uber வாடகைக் கார் என்று நினைத்து வேறொரு காரில் ஏறிச் சென்ற இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌத் கரோலைனா மாநிலத்தில் 21 வயது பல்கலைக்கழக மாணவி, சமந்தா ஜோசஃப்சன் (Samantha Josephson) அதிகாலை 2 மணியளவில் Uber காருக்காகக் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியே வந்த மற்றொரு காரில் தவறுதலாக அவர் ஏறிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் காரில் ஏறிய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர் தொலைவில் அவரின் சடலம் சுமார் 14 மணிநேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது.

அவர் Uber காருக்காகக் காத்திருந்தது, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் வழி தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல், கொலைக் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் 24 வயது நெத்தேனியல் டேவிட் ரோலண்ட் என்ற இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.