மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


ஷங்கரின் புதிய முயற்சி

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' திரைப்படம் முதலில் லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது. ஆனால் திடீரென லைகா நிறுவனம் இந்தப் படத்தை டிராப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. 
அதேசமயம் கமல்ஹாசனும், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.இந்த நிலையில் இந்த படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் இருவேறு கருத்துக்கள் வெளியானது. இன்னும் இரு நிறுவனங்களும் இந்தப் படத்தை தயாரிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை. 
இந்த நிலையில் 'இந்தியன் 2' படம் குறித்த முழு தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை ஷங்கர் தயாரித்­துள்ளார். இந்த புத்தகத்தில் இந்த படத்தின் கதை, நடிகர்களின் லுக், காட்சி அமைப்­புகள், தேவைப்படும் பட்ஜெட் என அனைத்து தகவல்களும் உள்ளது. 

இந்த புத்தகத்தை ரிலையன்ஸ், சன் பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் ஷங்கர் கொடுத்துள்ளதாகவும் அவர்களுடைய பதிலுக்கு ஷங்கர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.