மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


ஒருவரை விடுவிக்குமாறு ரிஷாத் கோரியது உண்மையே - இராணுவத் தளபதி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறினார்.

இராணுவத் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகின்றதே, இது குறித்த உண்மை என்ன? என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் கூறுகையில், குறித்த அமைச்சர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைது செய்யப்பட்டுள்ள நபர் இன்னாரின் உறவினர், இவர்கள் எல்லாம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், ஆகவே அவரை விடுதலை செய்ய முடியுமா என கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். முதலில் எனக்கு கைது செய்யப்பட்ட நபர் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. 

பின்னர் இரண்டாவது தடவையும் தொடர்புகொண்டு என்னுடன் இந்த விபரங்கள் குறித்து பேசினார். மூன்றாவது தடவையும் அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். எனினும் அப்போது அவர் குறிப்பிடும் நபர் குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து எனக்கு மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் அப்போது உங்களின் கோரிக்கையை நான் ஆராய்கின்றேன் என்று கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டேன் என்றார் 

No comments

Powered by Blogger.